International Course on Sejahtera
திணைத் திட்டம்
ஒன்று
உடல் நலம்
திணைத் திட்டம்
இரண்டு
உணர்வு நலம்
திணைத் திட்டம்
மூன்று
உழவு நலம்
திணைத் திட்டம்
நான்கு
பண்பு நலம்
திணைத் திட்டம்
ஐந்து
கலை நலம்
திணைத் திட்டம்
நான்கு
பண்பு நலம்
ICS Projects
International Certificate Course on Sejahtera - Projects திணை மன்ற செயல்பாடுகள் திட்டம் 1: வண்ண உணவும் மரபு உணவும் (ஏதேனும் மூன்று) இடுபணி 1: வண்ண கோப்போலை உடல் நலத்திற்கேற்ற உணவு வகைகளையும், ஊறு விளைவிக்கும் உணவு வகைகளையும், ஒரு கோப்போலையில் ஒட்டி, நிலைப்படம் எடுத்து ஜோபா வலைப்பக்கத்தில், பள்ளிக்கென்று ஒதுக்கப்பட்ட பக்கத்தில், பதிவேற்றம் செய்ய வேண்டும். (How to upload: Go to www.johnbrittoacademy.com, click GROUPS in menu, find and click your school logo and upload the photo or video) இடுபணி 2: உண்ண உணவு ஒவ்வொரு நாளுக்கும் ஒதுக்கப்பட்ட வண்ணத்தில் உணவு உண்டு அதனை நிலைப்படங்களாக எடுத்து ஜோபா வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். இடுபணி 3: தமிழ் மரபு உணவு காணொளி இரு திணைவீரர்கள் இணைந்து, தமிழ் மரபு உணவு ஒன்றை எப்படி சமைப்பது என்பது பற்றி உரையாடல் செய்து காணொளி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். (எடுத்துக்காட்டு: கம்மங்கூழ்) இடுபணி 4: திணை சமையற்காரர் காணொளி குடும்பத்தில் உள்ளோர், தமிழ் மரபு உணவு சமைப்பத, திணைவீரருக்கு சொல்லிக் கொடுக்கும் காணொளி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இடுபணி 5: திணைவீரரின் சுயஅனுபவ காணொளி வண்ண உணவு மாதத்தில் நடந்த நிகழ்வுகளில் தான் கற்றுக்கொண்டதை, திணைவீரர் எடுத்துச் சொல்வது போல் காணொளி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் திட்டம் 2: மரபுக் கலைகளும் மக்கள் நலன்களும் (ஏதேனும் ஒன்று) இடுபணி 1: திணை நாயகர்கள் குடும்பத்தில் ஒருவர் திணை நாயகர் போல் வேடமிட்டு, அவரது கதையை திணைவீரரிடம் கூறும் காணொளி செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். (எடுத்துக்காட்டு: ஔவையார் அல்லது ராசராச சோழன் போல் வேடமிட்டு தன் கதையைக் கூறவேண்டும்.) இடுபணி 2: திணைப்பாடல் தமிழ் அறம் பற்றி, ஆசிரியர் ஒருவர், எட்டு வரிப்பாடல் எழுதி, மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து இரண்டு நிமிடக் காணொளி தயாரிக்க வேண்டும். அதைப் பதிவேற்றம் செய்யவேண்டும். (எடுத்துக்காட்டு: பிறர் நலம் பேணுதல் பற்றி எட்டு வரிப்பாடல் எழுதி சொல்லிக்கொடுக்கலாம்) திட்டம் 3: வேளாண் வளம் - விதைக் களஞ்சியம்/விதை வைப்பகம் (ஏதேனும் ஒன்று) இடுபணி 1: விதை வைப்பகம் திணைவீரர், காய்கறி, பழவகைகள் அல்லது ஏதாவதொரு தாவரத்தின் விதைகளை எடுத்து பராமரித்து வைக்கும் காணொளி பதிவேற்றம் செய்யவேண்டும். இடுபணி 2: மட்கு எரு செய்தல் கழிவுப் பொருட்களை வைத்து மட்கு எரு செய்யும் காணொளியை பதிவேற்றம் செய்ய வேண்டும் திட்டம் 4: பண்பு மாதம் - பரிவு இடுபணி 1: பரிவு வெளிப்படும் ஏதாவதொரு செயல் செய்து அதனை காணொளியாக்கி பதிவேற்றம் செய்ய வேண்டும்.