கிட்டத்தட்ட 30 பெற்றோர்களும் அவர்களது குழந்தைகளும், 7 ஆசிரியர்களும் 5 ஜோபா வல்லுனர்களும் கலந்துக்கொண்டனர். ஜோபா மலேசியா தலைவர் திரு. மனோகரன் ஐயா அவர்கள் முன்னுரை அளிக்க, வல்லம்புரோசா பள்ளித் தலைமையாசிரியை திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் வரவேற்க, ஆசிரியை திருமதி. பொன்மொழி நெறிப்படுத்த, ஆஸ்திரேலிய ஜோபா கல்விக்கழகத்தின் தோற்றுநர் உயிர்மெய்யார் 'விவேகமிக்க உயிர்மை குழந்தைகளை வளர்ப்பது எப்படி?' என்கிற விளக்கம் அளித்தார். குழந்தைகளும் பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் கலந்துக்கொண்டு, கேள்விகளுக்கு ஆர்வத்துடன் பதிலளித்தனர். பிறகு ஜோபா மலேசியாவின் உறுப்பினர் ஒய்வுபெற்ற தலைமையாசிரியை திருமதி. செல்வி இராமசாமி அவர்கள் விளக்கம் அளித்தார். பிறகு பெற்றோர்கள், குழந்தைகள், ஆசிரியர்கள் கொண்ட 'உயிர்மை சமூகம்' உருவாக்கப்பட்டது. மூன்று மாத பயிற்சியில் கலந்துகொண்டு சான்றிதழ் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஒன்றரை மணி நேரத்தில் பயிற்சி நிறைவுற்றது.
top of page
JOBA
Australia
bottom of page
Comments