"மனிதநேயம் கொண்ட மனிதர்களாக நம் குழந்தைகள் வளர வேண்டும். அதற்கு இந்த பயோனிட்டி பள்ளித் திட்டத்தின் கீழ் உள்ள பயோனிட்டி குடும்பத் திட்டம் உதவி செய்யும்."
என்று முன்னாள் மனிதவள அமைச்சரும் தற்போதைய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் பெற்றோர்களுக்கான 'பயோனிட்டி குடும்பம்' கையேட்டை வெளியிட்டு பேசினார். சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சூங் சின் ஹென்ங் மற்றும் பாதாங் பாடங் மாவட்ட கல்வி அதிகாரி ஒஸ்மான் முகமேட் பகாரி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு செய்தனர்.
சுங்காய் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் உயிர்மிகு. தியாகராசன் காண்டியப்பன், லடாங் தோங் வா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் உயிர்மிகு. அன்பழகன் பெருமாள், லடாங் கிளாப்பா பாலி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் உயிர்மிகு. மாயாண்டி, லடாங் பனோப்டானே தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் உயிர்மிகு சரணவன் இராஜன் நாயுடு அகியோர் விருந்தினராகப் பங்கேற்றனர்.
ஆசிரியர்களும், குழந்தைகளும் பெருவாரியாகப் பங்கேற்றனர்.
ஜோபா ஆஸ்திரேலியா, மலேசியாவில் 25 தமிழ்ப்பள்ளிகளில், பயோனிட்டி பள்ளி என்கிற உயிர்மைப் பள்ளித் திட்டத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இந் நிகழ்வு நடந்தது.
ஜோபா மலேசியா நாட்டின் தலைவர் உயிர்மிகு. மனோகரன், அதன் ஆலோசகர் முனைவர் உயிர்மிகு. குமரன் வேலு மற்றும் தாப்பா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் உயிர்மிகு. குமுதா, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் உயிர்மிகு மேசா ராஜன் முத்தையா ஆகியோர் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
Kommentare