நொண்டி (பாண்டியாட்டம்) - பாரம்பரிய விளையாட்டு 29 - Traditional Game 29
- John Britto Parisutham

- May 7
- 1 min read
சாட், பூட், திரி போட்டு ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவர் தான் நொண்டி அடித்துக்கொண்டு எல்லோரையும் பிடிப்பவராக இருக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீங்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ஆடுகளத்தை (இருபது அடிக்கு இருபது அடியோ, அதற்கு மேலேயோ) சுற்றி கோடு போட்டுக்கொள்ளுங்கள். எல்லோரும் ஆடுகளத்திற்குள் நிற்க வேண்டும். நீங்கள் ஒரு காலை முட்டியிலிருந்து மடக்கிக்கொண்டு, ஓடி மற்றவர்களைப் பிடிக்க வேண்டும். அப்படிப் பிடிபட்டவர்கள், ஆட்டத்திலிருந்து வெளியேறவேண்டும்.
இன்னொரு முறையிலும் ஆடலாம். முட்டி மடக்கி, நொண்டி அடிக்காமல், இரு காலால் எம்பி எம்பி, உந்தி உந்தி போய் பிடிக்கலாம்.

Comments