ஆத்துக்கும் அந்தாண்ட - பாரம்பரிய விளையாட்டு - 28
- John Britto Parisutham
- May 7
- 1 min read
அமைப்பு: நீங்களும் உங்கள் அப்பாவும் ஆடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கையில் ஒரு பிடி மண்ணை எடுத்து அப்பா கொடுப்பார். பிறகு நீங்கள் கண்களை மூடிக்கொள்ளவேண்டும். உங்கள் அப்பா உங்கள் கண்களை அவரது கைகளால் மூடி வெவ்வேறு இடத்துக்கு அழைத்துச் செல்வார். அப்படி போகும் போது, வழக்கமாக கீழ்க்கண்டவாறு பாடிக்கொண்டே செல்ல வேண்டும்.
உங்கள் அப்பா: ‘வண்ணா வீடு எங்கருக்கு?’
நீங்கள்: ‘ஆத்துக்கு அந்தண்ட’
அது குறிப்பிட்ட ஒரு சாதி மக்களைக் குறித்துப் பாடுவதால், பாடலை நாம் மாத்திக்கொள்வோம்.
உங்கள் அப்பா: ‘ஆடு எங்க மேயுது?’
நீங்கள்: ‘ஆத்துக்கு அந்தண்ட’
உங்கள் அப்பா உங்களின் கண்களை முடியபடியே உங்களை அழைத்துச்சென்று, ஏதாவது ஓர் இடத்தில் உங்கள் கையில் இருக்கும் மண்ணை கீழே தரையில் வைப்பார். பிறகு, உங்களை ஆட்டம் துவங்கிய இடத்துக்கே அழைத்து வருவார். இப்பொழுது உங்கள் கண்களிலிருந்து கைகளை எடுத்துவிட்டு, இரண்டு மூன்று சுற்று சுற்றிவிட்டு, ‘நீ மண் போட்ட இடத்தை கண்டுபிடி’ என்பார். நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் வெற்றிபெற்றவர் ஆகிவிடுவீர்கள். இதில் ஞாபகச் சக்தி பெருகும்.
Comments