ஒரு குடம் தண்ணி ஊத்தி - பாரம்பரிய விளையாட்டு 31 - Traditional Game 31
- John Britto Parisutham
- May 7
- 1 min read
அமைப்பு: இருவர் படத்தில் காட்டியுள்ளபடி கைகளைக் கோர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நிற்க வேண்டும். வரிசையில் முதலில் நிற்பவர் கீ்ழ்க்கண்டப் பாடலைப் பாடவேண்டும். மற்றவர்கள் பின்பாட்டு பாடவேண்டும். பாடிக்கொண்டே கைகள் கோர்த்துள்ளவர்களின் நடுவில் தொடர்வண்டி போல பயணிக்கவேண்டும். பத்துகுடம் தண்ணி ஊத்தி என்று பாடி வரும்பொழுது கைகள் கோர்த்துள்ளவர்கள், வரிசையாக வருபவர்களில் யாரையாவது ஒருவரை சிறைப்பிடித்துக்கொள்ளவேண்டும்.
பாடல்: ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்
பின்பாட்டு: ஒரு பூ பூத்துச்சாம்
பாடல்: ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம்
பின்பாட்டு: ரெண்டு பூ பூத்துச்சாம்
….
….
(இப்படி பத்து பூ பூத்துச்சாம், என்று பாடும் போது தான் ஒருவர் பிடிபட்டுவிடுவார்)
பிடிபட்டதும், அதற்கு பின்னால் நிற்பவர், கை கோர்த்துள்ளவர்களிடம் கீழ்க்கண்ட பாடலைப் பாடி முறையிட வேண்டும்
பாடல்: (கழுத்து வரை காண்பித்து) ‘இத்தமுட்டும் பணம் தாரேன் விடுடா துளுக்கா’
கைகோர்த்திருப்பவர்கள்: ‘விடமாட்டேன் மளுக்கா’
இப்பாடலில் ஒரு மதத்தினரை குறிப்பிட்டு பாடுவது போல் இருப்பதால், நாம் பாடலை மாற்றிவிடலாம்.
பாடல்: (கணுக்கால் வரை காண்பித்து) ‘இத்தமுட்டும் பணம் தாரோம் விடுப்பா அன்பா’
கைகோர்த்திருப்பவர்கள்: ‘விடமாட்டோம் நண்பா’
பாடல்: (முழங்கால் வரை காண்பித்து) ‘இத்தமுட்டும் பணம் தாரோம் விடுப்பா அன்பா’
கைகோர்த்திருப்பவர்கள்: ‘விடமாட்டோம் நண்பா’
பாடல்: (இடுப்பு வரை காண்பித்து) ‘இத்தமுட்டும் பணம் தாரோம் விடுப்பா அன்பா’
கைகோர்த்திருப்பவர்கள்: ‘விடமாட்டோம் நண்பா’
பாடல்: (கழுத்து வரை காண்பித்து) ‘இத்தமுட்டும் பணம் தாரோம் விடுப்பா அன்பா’
கைகோர்த்திருப்பவர்கள்: ‘விடமாட்டோம் நண்பா’
பாடல்: (தலைஉச்சி வரை காண்பித்து) ‘இத்தமுட்டும் பணம் தாரோம் விடுப்பா அன்பா’
கைகோர்த்திருப்பவர்கள்: ‘விடமாட்டோம் நண்பா’
அப்பொழுது சிறைப்பிடிக்கப்பட்டவரை, கைகோர்த்திருப்பவர்கள் விட்டுவிடுவார்கள். விடுவதற்கு முன் இப்படி கேட்பார்கள்:
‘ஒரு சூடா, ரெண்டு சூடா, மூணு சூடா’
‘ஒரு சூடு’ என்று சொன்னால்
மறுபடி ‘ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்…’ என்று பாடிக்கொண்டு பயணம் தொடங்கும். பயணம் கைகோர்த்திருப்பவரின் நடுவில் செல்ல, அவர்களைச் சுற்றி 8 போல் வரவேண்டும்
பத்தாவது குடத்தில் இன்னொருவரை பிடித்துவிடுவார்கள். அவரை விடுவிக்க வேண்டும்.
Comments