உலகளாவிய ஜோபா வல்லுநர்களின் சந்திப்பு 2/2025 தீர்மானங்களும் கருத்தாடல்களும்.
- John Britto Parisutham
- Mar 23
- 2 min read
Updated: Mar 24

உலகளாவிய ஜோபா வல்லுநர்களின் சந்திப்பு 2/2025 தீர்மானங்களும் கருத்தாடல்களும்.
1) வரவேற்பு: ஜோபா மலேசியா உறுப்பினர் கவிஞர் கலைவாணி அவர்கள் அனைவரையும் தமது கவித்துவமான தமிழில் வரவேற்றார். 15 வல்லுநர்கள் பங்கேற்றனர்.
2) நெறியாள்கை: ஜோபா நிறுவநர் பேராசிரியர் ஜோன் பிரிட்டோ அவர்கள் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். இலங்கைத் தோழர் முத்துலிங்கத்தைப் பேச அழைத்தார்.
3) இலங்கை நிகழ்வுகள்: கீழ்க்கண்ட ஜோபா இலங்கை நிகழ்வைத் தோழர் முத்துலிங்கம் அறிவித்தார்.
a) 18.05.2025 - இலங்கை கொழும்பு சென்றுக் கண்டியை அடைதல்.
b) 19.05.2025 - கண்டி - மாகாணக் கல்வி இலாகா அதிகாரிகளோடு சந்திப்பு - பயோனிட்டி கருத்தாக்கம் பற்றிக் கலந்துரையாடல். அதனைத் தொடர்ந்து ஏதாவதொரு பாடசாலைக்குச் சென்று இலங்கைக் கல்வி முறையைப் பற்றித் தெரிந்துக் கொள்ளல்.
c) 20.05.2025 - நுவரேலியா - மக்கள் அமைப்புப் பிரதிநிதிகள், பணி ஓய்வு பெற்றவர்கள் இளைஞர்கள் தொண்டு நிறுவன அமைப்பாளர்கள் ஆகியோருக்குப் பயோனிட்டி பற்றிய ஒரு நாள் அறிமுகப் பயிற்சி.
d) 21.05.2025 - நுவரேலியா - சர்வதேசத் தேயிலைத் தினம் – பங்கேற்பு.
e) அடுத்த மூன்று நாட்களுக்கு ஊர் சுற்றிப் பார்த்தல்.
4) கீழ்க்கண்டவர்கள் ஜோபா இலங்கை நிகழ்வில் பங்கேற்கச் சம்மதித்துள்ளார்கள்.
a) மலேசியாவிலிருந்து திருவாளர்கள் மனோகரன், சுபாராவ்.
b) இந்தியாவிலிருந்து திருவாளர்கள் மகி, டிராமா செல்வம், அழகு அண்ணாவி, எரோணிமுஸ், (சந்தியாகும் பாமயனும் பிறகு அறிவிப்பார்கள்.)
c) ஆஸ்திரேலியாவிலிருந்து திரு. ஜோன் பிரிட்டோ
d) இலங்கையிலிருந்து திரு. முத்துலிங்கம், யோகேஸ்வரி
5) டிராமா செல்வம் கலைநிகழ்ச்சி நடத்துவது பற்றி யோசிக்கப்படும்.
6) இலங்கைப் பாடசாலையில் உள்ள குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்களும் எழுதுப்பொருட்களும் வழங்க ஏற்பாடு. இது குறித்துத் தோழர் யோகேஸ்வரி அவர்கள் சிறிது ஆய்வு செய்துவிட்டு எவ்வளவு செலவாகும் என்று சொல்வதாகச் சொன்னார்.
7) மலேசிய நிகழ்வுகள்: அதைத் தொடர்ந்து ஜோபா மலேசிய நிகழ்வு குறித்துத் திரு. மனோகரன் அறிவித்தார்.
a) மே மாதம் திட்டமிட்டிருந்த பயிற்றுநர்களுக்கானப் பயிற்சி தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
b) 2025க்கான ஜோபா பயோனிட்டிப் பணிகள் பள்ளி அளவிலான பயிற்சியோடு தொடங்கும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் செயல்முறைப் பயிற்சி இருக்கும். அடுத்துப் பெற்றோர்களுக்கான பயிற்சி இருக்கும். தொடர்ந்து மாணவர்கள் ஆறு பயோனிட்டித் திட்டங்களைச் செய்வார்கள். இது தேவி அம்மாவின் கருத்திலிருந்து பிறந்த உத்தி என்று மனோகரன் அவர்கள் மகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.
c) இலங்கை நிகழ்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ ஜோபா மலேசிய உறுப்பினர்களைச் சந்தித்துத் திட்டமிடல் செய்ய வாய்ப்பு இருக்கிறது.
8) திரு. சுபாராவ் பேசும் போது கீழ்க்கண்டவைகளைக் குறிப்பிட்டார்.
a) இலங்கைப் பள்ளிக் குழந்தைகளுக்கு எழுதுப் பொருட்கள் கொடுப்பது நல்லது. (இதுபற்றி இலங்கை நிகழ்வு குறித்துப் பேசும் போது கலந்துரையாடினோம்.)
b) மலேசியக் குழந்தைகள் மத்தியில் வேப் போன்ற உடல் நலத்திற்குத் தீங்கான பழக்கங்களிலிருந்து விடுபட, அரசு அதிகாரிகள் ‘திரைப்படத்திற்குப் போ’ என்கிற திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்று சொன்னார். அதற்கு நாம் குறும்படங்களை உருவாக்கித் தரலாம் என்று கூறினார். அது குறித்துத் திரைப்பட இயக்குநர்கள் வேல்முருகன், மகிமைப்பிரகாசம், அழகு அண்ணாவி, டிராமா செல்வம் போன்றார் ‘நல்ல கருத்து’ என்றும் ‘செய்யலாம்’ என்றும் கூறினார்கள். எரோணிமுஸ் அவர்களும் குறும்படம் மூலம் மாணாக்கர்களுக்கு எளிதாகவும், விரைவாகவும், தெளிவாகவும் கருத்துக்களைப் பதிவு செய்த அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டனர். சந்தியாகு, ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் தமிழ் இலக்கியத்தை இசையாகப் பாடலாக வெளியிடுவதைக் குறிப்பிட்டார்.
c) அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம், பினாங்கில் நடக்கப் போகிற ‘எழுமின்’ நிகழ்ச்சியில் பயோனிட்டி பற்றிக் கருத்துரை வழங்கலாம் என்று கூறிய போது, பாமயன் அது குறித்த வாய்ப்புகளைச் சம்பந்தப்பட்டவர்களோடு பேசுவதாகக் கூறினார்.
9) வாசிப்புத் திறன்: டாக்டர் கோகிலா தங்கசாமி அவர்கள், குழந்தைகளின் வாசிப்புத்திறன் பாழ்பட்டு கிடக்கும் நிலையைக் கூறி, எளிதாக வாசிக்கும் பழக்கத்திற்கான உத்திகளை ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் மலேசியா போன்ற நாடுகளில் செய்யமுடியுமா என்ற கேள்வியை எழுப்பினார். தோழர் முத்துலிங்கம் இலங்கையிலும் அப்படி வாசிக்கும் பழக்கம் இல்லையென்றும், கவிஞர் கலைவாணி மலேசியாவிலும் அப்படி வாசிக்கும் பழக்கும் குறையாக இருக்கிறது என்றும், புலவர் இளங்குமரன் சிங்கப்பூரிலும் அப்படி வாசிக்கும் பழக்கம் சிறப்பாக இல்லையென்றும் கூறினார்கள். அப்படிப் பயிற்சிகள் ஏற்பாடு செய்வதாக இருந்தால் அது பயோனிட்டி கருத்தாக்கத்துக்கு ஒத்துப் போகும் அளவுக்கு நடத்தவேண்டும் என்று சந்தியாகு கூறினார்.
10) தாளாண்மை இதழ்: தாளாண்மை இதழுக்கு நாம் அனைவருமே கட்டுரை எழுதுவதன் மூலமாகவும், பொருளாதார ஆதரவும் கொடுக்கவேண்டும் என்ற பேச்சு வந்த பொழுது, குழந்தைகளுக்கு எப்படி வாசிக்கும் பழக்கம் குறைந்து போனதோ, அது போல எழுத்தாளர்களுக்கு எழுதும் பழக்கமும் குறைந்து போய்விட்டது என்று பாமயன் சொன்னார். அது செயற்கை நுண்ணறிவு பற்றிய கலந்துரையாடலுக்கு இட்டுச் சென்றது. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தரவுகளைத் தேடிச் சீர் செய்து ஓர் அமைப்பாக, செயற்கை நுண்ணறிவு இயந்திரக் கற்றல் மூலம் கொடுக்கிறது. அது அதையும் தாண்டி தானாகக் கற்றதிலிருந்து விடயங்களைக் கொடுக்குமா? என்கிற கேள்வியோடு கலந்துரையாடல் நிறைவு பெற்றது.
11) நன்றியுரை: கவிஞர் கலைவாணி அவர்கள் தன் சுந்தரத் தமிழில் நன்றி கூறிக் கூட்டத்தை நிறைவு செய்தார்.
コメント