தட்டாமாலை - பாரம்பரிய விளையாட்டு 15
- John Britto Parisutham
- Apr 6
- 1 min read
இருவர் எதிர் எதிரே நின்றுக் கொள்ளுங்கள். உங்களது இடக்கையால் எதிரில் நிற்பவரின் வலக்கையைப் பிடியுங்கள். உங்கள் வலக்கையால் எதிரில் நிற்பரின் இடக்கையைப் பிடியுங்கள். பெருக்கல் குறி X போல வந்துவிட்டதா? இப்பொழுது இருவரும் பின்னால் சற்றே சாய்ந்து கொள்ளுங்கள். ஒருவரின் எடையை இன்னொருவர் இழுத்துக்கொண்டிருப்பீர்கள். உங்கள் இருவரின் கால்களும் அருகருகே இணைந்தே இருக்கட்டும். இப்பொழுது சுற்ற ஆரம்பியுங்கள். மெதுவாக துவங்கி வேகம் கூட்டி பிறகு மெதுவாக குறையுங்கள். சிலர் வேகமாகச் சுற்றிப் பிறகு தரையில் ஒரே நேரத்தில் உட்காருவர். ஒருவரோடு சுற்றிய பிறகு உங்கள் துணையை மாற்றிக்கொண்டு சுற்றலாம்.
கூடுதல் தகவல்: இது ஒவ்வொருவரின் பலத்தை சோதிக்கும் விளையாட்டு. இருவர் இணைந்தால் தான் விளையாட முடியும். இருவருக்கிமிடையேயான நம்பிக்கை உறுதிப்படுத்தப்படும். இரு எதிர் எதிர் திசையில் இழுக்கப்படும் இருப் பொருட்கள் ஓரிடத்தில் சுற்றிக்கொண்டே இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு. ஒரு கிரகமும் இன்னொரு கிரகமும் தன் தன் மாலை போன்ற பாதையில், ஒன்றையொன்று தட்டாமல், ஈர்ப்பு விசையால் சுற்றிக்கொண்டே இருப்பதால் இந்த விளையாட்டிற்கு தட்டாமாலை என்று பெயர் வைத்தார்களோ? எனக் கூட வியக்கலாம்.
Comments