தாண்டு கயிறு - பாரம்பரிய விளையாட்டு 22
- John Britto Parisutham
- Apr 10
- 1 min read
தேவையானப் பொருட்கள்: தாண்டு கயிறு
விளையாட்டு: கடைகளில் விற்கும் தாண்டு கயிற்றை வாங்கிக் கொள்ளலாம். அல்லது நீங்களே கட்டைவிரல் தடிமனான கயிறு இருந்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
முறை 1: இரு கைகளிலும் நீங்கள் பிடித்துக்கொண்டு கயிறைத் தாண்டி விளையாடலாம். தாண்டும் போது கயிற்றில் கால் பட்டுவிட்டால், தொடரமுடியாது.
முறை 2: உங்கள் எதிரில் இன்னொருவரை நிறுத்திக் கொண்டு இருவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் குதிக்கலாம். நீங்கள் மேலே குதிக்கும் போது, கயிறு கீழ் வழியாக வர வேண்டும். யாராவது ஒருவர் காலில் படும் வரை குதித்துக்கொண்டே இருக்கலாம்.
முறை 3: ஒருவர் ஒரு பக்க கயிறை பிடித்துக்கொள்ள, மற்றவர் மறு பக்க கயிறை பிடித்துக் கொள்ள, நீங்கள் நடுவில் குதிக்கலாம். கயிறு நீண்டு இருந்தால், எத்தனை பேர் வேண்டுமென்றாலும் குதிக்கலாம்.
கூடுதல் தகவல்
தேங்காய் நாறில் செய்யப்பட்ட கயிறு கிடைக்கவில்லையென்றால், வைக்கோல் போரில் இருக்கும் வைக்கோலைக் கொண்டு கயிறு திரித்து விளையாடலாம். அல்லது கோவக்காய் போன்ற கொடிகளை பிய்த்து கயிறாகப் பாவித்து விளையாடலாம். கயிறு கத்தாழை நாறிலும், தேங்காய் மட்டை நாறிலும் கூட செய்யலாம். விளையாடுபவர்கள் தாளலயம் கற்றுக் கொள்வர். உடல் அமைப்பு சீராகும்.
Comentários