தீப்பெட்டித் தொலைபேசி - பாரம்பரிய விளையாட்டு 23
- John Britto Parisutham
- Apr 10
- 1 min read
தேவைப்படும் பொருட்கள்: தீப்பெட்டிகள் (நெருப்புப்பெட்டிகள்), நூல், நெருப்புக்குச்சி 2, ஊசி
செய்முறை: நெருப்பு பெட்டியில் குச்சிகள் இருக்கும் பெட்டிகள் இரண்டை எடுத்துக்கொள்ளுங்கள். பெட்டியின் மையத்தில் ஊசியால் ஓட்டை போடுங்கள். நூலை அந்த ஓட்டையில் விடுங்கள். நூலின் முனையை சிறு நெருப்புக்குச்சியால் கட்டிவிடுங்கள். அதே போல அடுத்த பெட்டியிலும் செய்யுங்கள். இப்பொழுது படத்தில் காட்டியுள்ளபடி தொலைபேசி தயார்.
விளையாட்டு: நீங்கள் ஒரு பெட்டியை வாயில் வைத்துக்கொள்ளுங்கள். எதிர் பக்கத்தில் பத்து அல்லது இருபது அடி தூரத்தில் ஒருவரை நிறுத்தி அவரது காதில் ஒரு பெட்டியை வைத்துக்கொள்ளச் சொல்லுங்கள். நீங்கள் பேசுங்கள். அவரது காதில் அது சிறப்பாக விழும்.
Comments