செங்கல்லும் பந்தும்
- John Britto Parisutham
- Apr 10
- 1 min read
தேவைப்படும் பொருட்கள்: இரண்டு செங்கற்கள், பந்து
அமைப்பு: இரண்டு செங்கற்களை ஒன்றன் மீது ஒன்றாக நிற்க வையுங்கள். இருபது அடி தள்ளி ஒரு கோடு போட்டுக் கொள்ளுங்கள். இருக்கிறவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு குழு அடிக்கும் குழு. இன்னொரு குழு ஓடும் குழு.
கூடுதல் தகவல்: துணி கொண்டு பந்து செய்யலாம். ஆலமரத்து பிசினைப் பந்து போல் ஆக்கி விளையாடலாம். பனங்கிட்டியை (சிறு பனங்காய்) வெட்டி, காய வைத்து, பந்தாக உபயோகப்படுத்தலாம். இவைகளை வைத்து விளையாடும் போது, அதைத் தூக்கி எறிந்தாலும் நிலம் வீணாகாது. யாரோ விற்பதை வாங்குவதை விட, இருக்கும் பொருட்களை வைத்து நாமே நமக்குத் தேவையானப் பொருட்களைத் தயாரிக்கலாம். இது தான் தற்சார்பு வாழ்வியல். இதில் ஒவ்வொருவரின் படைப்புத்திறனும் வெளிவரும். நெகிழியில் செய்யப்படும் பந்துகள் நிலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த விளையாட்டு உடலை சீராக வைத்திருக்க உதவும். நல்ல உடற்பயிற்சி தரும் விளையாட்டு இது. இதற்கு பிள்ளையார் பந்து என்றும் பெயரிட்டு அழைப்பர். ஏன் இதற்கு பிள்ளையார் பந்து என்று பெயர் வந்தது என்று ஆய்வு செய்யலாம்.
コメント