திருடன்...போலீஸ் (கள்ளன்-காப்பான்) - பாரம்பரிய விளையாட்டு 27
- John Britto Parisutham
- Apr 11
- 1 min read
திருடன் போலீஸ் (கள்ளன்-காப்பான்)
அமைப்பு:
முறை 1:
சாட், பூட், திரி போட்டு யார் திருடன், யார் போலீஸ் என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். மீதி இருக்கும் அனைவரும் பொது மக்கள்.
முறை 2:
குழுவாக உட்கார்ந்துக் கொள்ளுங்கள். கீழே குறிப்பிட்டபடி சீட்டுகளைத் தயார் செய்துக் கொள்ளுங்கள்.
விளையாட்டு:
முறை 1: போலீஸ் திருடனைப் பிடிக்க முயலவேண்டும். திருடன் போலீஸின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டும். திருடனோ மக்களை ஒவ்வொருவராகப் பிடிக்க வேண்டும். அப்படிப் பிடிபட்டவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேறியவர்கள் ஆவார்கள். திருடனாயிருந்து யார் அதிகம் பேரைப் பிடிக்கிறார்கள் எனப் பாருங்கள். அவரே வெற்றி பெற்றவராவார்.
முறை 2: எத்தனைப் பேர் இருக்கிறார்களோ, அத்தனைப் பேருக்கான துண்டுச்சீட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ராஜா, ராணி, மந்திரி, தளபதி, சேவகன், கள்ளன், காப்பான் என்று தேவையான கதாபாத்திரங்களை ஒவ்வொரு சீட்டிலும் எழுதுங்கள். அவைகளுக்கு நீங்கள் விரும்பும் மதிப்பெண்களைக் கொடுங்கள். ஆனால் கள்ளனுக்கு பூஜ்யம் என்றும் காப்பானுக்கு 1000 என்றும் கொடுங்கள். எல்லோரும் வட்டமாக உட்காருங்கள். சீட்டுகளை குலுக்கி நடுவில் போடுங்கள். ஒவ்வொருவரும் ஒரு சீட்டை எடுத்து, மற்றவர்களுக்குக் காண்பிக்காமல் மறைத்து வைத்துக் கொள்ளுங்கள். யார் யார் எந்தக் கதாபாத்திரம் என்று யாருக்கும் தெரியாது. காப்பான் சீட்டு எடுத்தவர் மாத்திரம் 'நான் தான் காப்பான்' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பொழுது யார் கள்ளன் என்று காப்பான் கண்டு பிடிக்க வேண்டும். காப்பான், எல்லோர் முகத்தையும் பார்த்துவிட்டு ஒருவரைச் சுட்டிக்காண்பித்து அவர் தான் கள்ளன் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் உண்மையிலேயே கள்ளன் சீட்டை வைத்திருந்தால், கண்டுபிடித்து காப்பானுக்கு 1000 மதிப்பெண்கள் கொடுங்கள். கள்ளனுக்கு பூஜ்யம் தான். முதல் முறையிலேயே காப்பான் கள்ளனைச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டால், கள்ளனுக்கு 1000 மதிப்பெண்கள். காப்பானுக்கு பூஜ்யம். மற்றக் கதாபாத்திரங்களுக்கு அந்தந்த சீட்டில் குறிக்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் போய் சேரும். இப்படி 5 அல்லது 10 தடவை ஆடி, எல்லா மதிப்பெண்களையும் கூட்டி, யார் அதிகம் மதிப்பெண்களை வாங்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
Comments